×

டொமினிக் ஜீவா மறைவு: இந்திய கம்யூ. இரங்கல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: தமிழ் படைப்புலக ஆளுமையும், மூத்த முன்னோடியுமான டொமினிக் ஜீவா (94) காலமானார் என்ற செய்தி தாங்கவொணாத் துயரமாகும். டொமினிக் ஜீவா மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வணக்கம் கூறி, அஞ்சலி செலுத்துகிறது.  மற்றொரு இரங்கல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினரும், ஜனசக்தி ஆசிரியர் குழு உறுப்பினருமான ராஜ்மோகன் (76) காலமானார் என்ற துயரச்செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறோம். அவரை பிரிந்து வாடும்  குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று ஆறுதல் தெரிவிக்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Death ,Dominic Jeeva: Indian Comm , Death of Dominic Jeeva: Indian Comm. Mourning
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை